இலவச சமையல் எரிவாயு திட்டம்: பட்ஜெட்டில் அருண் ஜெட்லி தகவல்

திங்கள், 29 பிப்ரவரி 2016 (11:26 IST)
2016-2017 ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று (29-02-2016) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். கவிதையுடன்  பட்ஜெட்டை தொடங்கிய அருண் ஜெட்லி இந்தியாவின் அன்னிய செலவானி கையிருப்பு இது வரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக கூறினார்.


 
 
நாட்டின் அன்னிய செலவானி கையிருப்பு இதுவரை இல்லாத 350 பில்லியன் டாலர் அளவிற்கு  உயர்ந்துள்ளதாகவும். மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ காப்பீடு இந்த பட்ஜெட்டில் அறிமுக படுத்தப்படுவதாகவும் கூறினார்.
 
மேலும் கிராமப்புற மற்றும் சமூகநலத் திட்டங்களுக்கு அதிகம் செலவிட அரசு முன்னுரிமை கொடுப்பதாகவும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்க திட்டம் வகுத்திருப்பதாகவும் கூறினார். நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது என அருண் ஜெட்லி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்