வருமான வரிச்சலுகையால் 2 கோடி பேர் பலன்: பட்ஜெட்டில் அருண் ஜெட்லி தகவல்

திங்கள், 29 பிப்ரவரி 2016 (14:34 IST)
2016-2017 ஆம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் வருமான வரி விலக்கின் உச்சவரம்பில் மாற்றம் ஏதும் இல்லை உட்பட பல முக்கிய தகவல்களை தெரிவித்தார்.


 
 
இந்த பட்ஜெட்டில், 5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் உள்ளவர்ககுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. 87 ஏ பிரிவின் கீழ் 5 ஆயிரம் வரிச்சலுகை வழங்கப்படும் எனவும், வருமான வரிச்சலுகையால் 2 கோடிபேர் பலன் அடைவார்கள் எனவும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
 
மேலும், பங்கு விலக்கல் துறையின் பெயர், முதலீடு மற்றும் பொது சொத்துத்துறை என மாற்றப்படும். பங்குச் சந்தைகள், காப்பீடு மற்றும் ஓய்வூதிய துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என மத்திய பொது பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்