தன் ஒரு மாத குழந்தையின் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட சமீரா ரெட்டி!

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (17:01 IST)
1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அஜித் நடித்த சிட்டிசன் படத்தில்  துணை கதாபாத்திரத்தில் நடித்து பிறகு   கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சியமானார். 


 
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். 
 
பிறகு திருமணமான  ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார். அதையடுத்து கடந்த மாதம் ஜூன் 12ம் தேதி ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு "நைரா" என பெயர் வைத்துள்ளனர்.  அவ்வப்போது குழந்தையின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வரும் சமீரா ரெட்டி தற்போது மகள் நைரா பிறந்து ஒரு மாதம் ஆகியுள்ளதை அழகிய புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். 


 
இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்ஸ் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி குழந்தையின் அழகை வர்ணித்து வருகின்றனர்.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்