பட தோல்வி; ரூ.55 கோடி நஷ்ட ஈடு: பிரபல கான் நடிகர் வேதனை
செவ்வாய், 11 ஜூலை 2017 (16:48 IST)
டியூப்லைட் திரப்படம் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியானது. படத்தின் பெயருக்கு ஏற்றார் போலவே படம் டியூப்லைட்டாகதான் இருந்தது என தெரிகிறது.
சமீப காலமாக சல்மான் கான் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில், கடந்த மாதம் வெளியான ’டியூப்லைட்’ ரசிகர்களை ஏமாற்றியது.
டியூப்லைட் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் ரூ.114.50 கோடி வசூலித்தது. ஆனாலும், விநியோகஸ்தர்களுக்கு இது நஷ்டத்தை ஏற்படுத்தியதால், சல்மான் கான் ரூ.55 கோடி நஷ்ட ஈடு கொடுப்பதாக அறிவித்துள்ளார்.