அவன் காதலிகள் பற்றி எனக்கு பிரச்சனைகள் இல்லை; பிரபல நடிகரின் தந்தை

வெள்ளி, 9 ஜூன் 2017 (17:55 IST)
அவன் காதலிகள் பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என பிரபல பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரின் தந்தை ரிஷி கபூர் கூறியுள்ளார்.


 

 
பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பிர் கபூர், தீபிகா படுகோனே காதலர்களாக இருந்தார். பின் ரன்பிர் கபூர், கத்ரீனா கைப் இருவரும் கதலித்து வந்தனர். ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். இதனால் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்ப்பார்த்தபோது இருவரும் திடீரென பிரிந்து விட்டனர்.
 
தற்போது ரன்பிர் கபூர், கத்ரீனா கைப் நடித்துள்ள ஜக்கா ஜசூஸ் படத்தை இருவரும் சேர்ந்து விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் ரன்பிர் கபூர் பற்றி அவரது தந்தை ரிஷி கபூர் கூறியதாவது:-
 
நானும் என் மகனும் சேர்ந்து மது அருந்துவோம். ஆனால் அவர் என் முன் புகைப்பிடிக்க மாட்டேன். நானும் அப்படிதான், என் தந்தை முன் புகைப்பிடிக்க மாட்டேன். என் மகனின் காதல் வாழ்க்கையில் நான் தலையிடுவது இல்லை. அவன் காதலிகள் பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. 
 
அவன் தனது காதலிகளை வீட்டிற்கு அழைத்து வருவான். ஒருமுறை நான் அவர் வீட்டிற்கு சென்றபோது, அவனுடன் அவன் காதலியும் தங்கியிருந்தார் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்