அசிங்கமா இருக்கு... அருவருக்கத்தக்க படத்தில் நடித்தது குறித்து பிரியங்கா சோப்ரா வேதனை!

சனி, 3 ஜூன் 2023 (16:57 IST)
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா மிஸ் வேர்ல்ட் 2000 போட்டியில் வெற்றி பெற்று பின்னர் சினிமாவில் ஹீரோயின் ஆனார். இவர் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். 
 
இவர் பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டார். பாலிவுட்டின் முக்கிய நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா, கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். 
 
இந்நிலையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் , சில சமயங்களில் விருப்பம் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். அப்படி எனக்கு விருப்பம் இல்லாமல் ஒரு படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நடித்ததை இப்போது நினைத்தால் கூட அருவருப்பாக இருக்கிறது என கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்