திரையில் உலாவரப்போகும் அப்துல் கலாம்

வியாழன், 12 மே 2016 (15:36 IST)
அப்துல் கலாமின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்ற முனைப்பில் பலர் திரிகிறார்கள். இந்திப்படவுலகுக்கு மட்டுமே கட்டுப்படியாகும் பட்ஜெட் என்பதால் இந்திப்பட இயக்குனர்கள் இதில் முந்துகிறார்கள். 


 
 
இயக்குனர் பிரமோத் கோர் சமீபத்தில் அப்துல் கலாம் பிறந்து வளர்ந்த ராமேஸ்வரம் சென்று அவரைக் குறித்த தகவல்களை சேகரித்து திரும்பியுள்ளார். மேலும், அக்னி சிறகுகள் உள்ளிட்ட அப்துல் கலாமின் புத்தகங்களை படித்து வருகிறார். 
 
அப்துல் கலாம் குறித்த படத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்து முறைப்படி அவரது குடும்பத்தினரின் அனுமதி பெற்றே படத்தை எடுப்பேன் என்று பிரமோத் கோர் கூறியுள்ளார். அப்துல் கலாமாக நடிக்க அவரது தேர்வு இர்பான் கான். 
 
நடிகர் தேர்வு அபாராம்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்