அமெரிக்க மாடல் நர்கீஸ், ராக் ஸ்டார் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார். பாலிவுட் நடிகைகள் பலர் தங்கள் பெயரில் மொபைல் அப்ளிகேஷன்கள் வெளியிட்டுள்ளனர். அதன்மூலம் அவர்கள் தங்களது ரசிகர்களுடனும் தொடர்பில் இருந்து வருகின்றனர்.
அந்த வரிசையில் நர்கீஸ் ஃபக்ரி, அவரது பெயரில் உள்ள மொபைல் அப்ளிகேஷன் பயன்படுத்தும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அறிவித்துவித்துள்ளார். தனது அப்ளிகேஷனை பயன்படுத்தும் ரசிகர்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருடன் டேட்டிங் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.