மனைவி கஜோலுக்காக படம் தயாரிக்கும் அஜய்தேவ் கான்

புதன், 25 பிப்ரவரி 2015 (14:11 IST)
திருமணமான பிறகு நடிப்பிலிருந்து விலகியிருந்த ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூரின் தயாரிப்பில் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்து தனது ரீ என்ட்ரியை பதிவு செய்தார். அதேபோல் கஜோல் தனது கணவர் அஜய்தேவ் கான் தயாரிப்பில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குகிறார்.
இந்த வருடமே கஜோல் நடிப்பில் ஒரு படம் வெளியாகும் என கூறப்பட்டது. சில காரணங்களால் அந்த புராஜெக்ட் டேக்ஆஃப் ஆகவில்லை. 
 
இந்நிலையில், 2016 -இல் தான் நடித்தப் படம் திரைக்கு வரும் என கஜோல் உறுதி அளித்துள்ளார். இந்தப் படத்தை அஜய்தேவ் கான் தயாரிக்கிறார். ஜுலை அல்லது ஆகஸ்டில் படப்பிடிப்பை தொடங்குகின்றனர்.
 
படத்தை யார் இயக்குகிறார்கள், யார் நடிக்கிறார்கள் என்பதை இன்னும் வெளியிடவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்