அம்மா வழி வேறு என் வழி வேறு: ஜான்வி!

வியாழன், 12 ஜூலை 2018 (18:06 IST)
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி பாலிவுட் படத்தில் தடக் என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
 
மராத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சாய்ரத் படத்தின் இந்தி ரீமேக்காக தடக் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் நாயகனாக இஷான் கட்டார் நடித்திருக்கிறார். சஷாங்க் கைதான் இயக்கியிருக்கிறார். படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 
 
இந்நிலையில், இந்த படம் வெளியாக உள்ளதால், ஜான்வி அவரது தாய் ஸ்ரீதேவி போலவே இந்திய அளவில் பெரிய நடிகையாக விரும்புவதாக செய்திகள் வெளியாகின. 
 
இதற்கு பதில் அளித்துள்ளார் ஜான்வி. அவர் கூறியதாவது, நான் என் வழியில் செல்ல விரும்புகிறேன். அம்மா நடித்த காலகட்டம் வேறு. என்னை பொறுத்தவரை ஒரு மொழியில் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால் அந்த மொழியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். அம்மா போல பல மொழிகளில் நடிக்க வேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்