தமிழ் சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கி இந்திய சினிமாவின் இயக்குனராக தடம் பதித்தவர் இயக்குனர் மணி ரத்னம். ரோஜா, பாம்பே, தளபதி, நாயகன், குரு போன்ற படங்களின் மூலமாக இந்திய சினிமாவில் கவனம் பெற்ற மணிரத்னம் ஒவ்வொரு காலக்கட்டத்தில் உள்ள இளைஞர்களின் காதலையும் பதிவு செய்யும் விதமாக மௌனராகம், அலைபாயுதே, ஓகே கண்மணி போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.
இதுவரை 26 படங்களை இயக்கியுள்ள மணிரத்னம் தனது கனவு படமான “பொன்னியின் செல்வன்” படத்தின் படப்பிடிப்புகளை தொடங்கியுள்ளார். இன்று அவரது பிறந்தநாளையொட்டி அவர் குறித்த ஸ்டேட்டஸ் போன்றவற்றை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் பொன்னியில் செல்வன் குறித்த அப்டேட் கேட்டு சமூக வலைதளங்களில் #PonniyinSelvan என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.