இந்தி த்ரிஷ்யம் - ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் டெட்

புதன், 5 ஆகஸ்ட் 2015 (09:53 IST)
அஜய்தேவ் கானுக்கு இந்தியாவில் 100 கோடிகள் வசூலிக்கும் நட்சத்திர பலம் இருக்கிறது. த்ரிஷ்யம் நான்கு மொழிகளில் வெளியாகி நான்கிலும் வெற்றி பெற்ற கதை. இந்தி த்ரிஷ்யம் இலகுவாக 100 கோடியை எட்டும் என எதிர்பார்த்தனர். ஆனால்...?
த்ரிஷயத்துக்கு அனைத்து ஊடகங்களும் அருமையாக விமர்சனம் எழுதின. சிறந்த படம் என்று தவறாமல் குறிப்பிட்டன. ரசிகர்களும் இதையே இணையத்திலும், நேர்ப் பேச்சிலும் சொன்னார்கள். ஆனால் படத்தின் வசூல்?
 
சென்ற வெள்ளிக்கிழமை வெளியான படம், முதல்நாள் இந்தியாவில் 8.50 கோடிகளை வசூலித்தது. இரண்டாவது நாள் சனிக்கிழமை 9.40 கோடிகள். ஞாயிறு 12.13 கோடிகள். வசூல் நாளுக்குநாள் அதிகரித்தது என்றாலும், நேற்று திங்கள்கிழமை வசூல் மிகவும் குறைவு. 4.05 கோடிகள். நான்கு நாள்களில் மொத்தமாக 34.08 கோடிகள். சல்மானின் பஜ்ரங்கி பைஜான் படத்தின் இரண்டாவது நாள் வசூல் இதைவிட அதிகம்.
 
விமர்சகர்கள் ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டை பெற்றும், த்ரிஷ்யம் 100 கோடிகளை எட்டுமா என்பது பலத்த சந்தேகம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்