கழட்டி காட்டு... உன்னை அப்படி பார்க்க தான் கூட்டம் வரும் - வேதனையை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா!

புதன், 24 மே 2023 (14:26 IST)
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா மிஸ் வேர்ல்ட் 2000 போட்டியில் வெற்றி பெற்று பின்னர் சினிமாவில் ஹீரோயின் ஆனார். இவர் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். 
 
இவர் பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டார். பாலிவுட்டின் முக்கிய நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா, கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். 
 
இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் ஹீரோவுடன் நெருக்கமான கட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அப்போது இயக்குனர் என்னுடைய ஆடையை கழட்டி உள்ளாடையை காட்ட சொன்னார். என முடியாது என மறுத்ததற்கு இதை பார்க்க தான் ரசிகர் கூட்டம் வரும் என்று மோசமாக பேசினார். 
 
அவர் சொன்ன விஷயம் எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. அதனால் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.  சினிமாவில் வியாபாரத்தை மட்டும் கண்ணோட்டமாக வைத்து படங்கள் எடுக்கப்படுவது மிகுந்த வேதனையை கொடுக்கிறது என அவர் கூறினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்