''குறைந்த ரேட்டிங்''கொடுத்த ஊடகவியலாளரை பிளாக் செய்த முன்னணி நடிகர்

வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (14:36 IST)
இந்தியில் வெளியான பிரமாண்ட படத்திற்கு குறைந்த ரேட்டிங் கொடுத்த ஊடகவியலாளரை பிரபல  நடிகர் பிளாக் செய்துள்ளார்.

சமீப காலமாக 3 கான்களின் படங்களும், முன்னணி நடிகர்களின் படங்களும் பாலிவுட்டில்  தோல்வியைச் சந்தித்தன. இதையடுத்து, பாலிவுட்  பிரபலங்கள் என்ன செய்வதென்று யோசித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான லைகர் படத்தை அடுத்து,  ரன்பீர் கபூர் – ஆலியாபட்- அமிதப்  - நாகாரஜூர் நடிப்பில், அயன் முகர்ஜி இயக்கத்தில்  இன்று வெளியாகியுள்ள பிரமாஸ்திரா என்ற படமும் கலவையான விமர்சனம் பெற்றுள்ளது.

இப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், பிரபல  சினிமா விமர்சகர் உமர் சாந்து, பிரமாஸ்திரா படத்திற்கு 2.5 ரேட்டிங் மட்டுமே கொடுத்ததால், அவரை, வாட்ஸ் ஆப்பில் நடிகர் ரன்பீர் கபூர் பிளாக் செய்துள்ளார்.
 

#RanbirKapoor BLOCKED me on whatsapp after giving 2.5 ⭐️ to #Brahmastra !

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்