கோவிலை நீக்குங்க - பிரபுதேவா படத்தில் கண்டிப்பு காட்டிய சென்சார்

செவ்வாய், 2 டிசம்பர் 2014 (19:27 IST)
டிசம்பர் 5 பிரபுதேவா இயக்கியிருக்கும் ஆக்ஷன் ஜாக்சன் வெளியாகிறது. அஜய்தேவ் கான் நடித்திருக்கும் இந்தப் படம், வெறும் மசாலா என்று இந்தி ஊடகங்கள் பிரபுதேவா மீதான பொறாமையில் பொரிந்தாலும் படத்துக்கு ஏக எதிர்பார்ப்பு.


 
 
படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள் யுஏ சான்றிதழ் தந்துள்ளனர். அந்தவகையில் படம் முதல் டெஸ்டை பாஸ் செய்திருக்கிறது. ஒரேயொரு வார்த்தையை மட்டும் மாற்றச் சொல்லியிருக்கிறது சென்சார். அது, டெம்பிள் என்ற வார்த்தை. அதாவது கோவில். 
 
மத சம்பந்தமான வார்த்தை என்பதால் கண்டிப்பாக மாற்றியே ஆகவேண்டும் என சென்சார் அடம்பிடிக்க உடனே சம்மதித்திருக்கிறார்கள். கோவில் என்ற வார்த்தை எந்த மாதிரி சூழலில், எந்த மாதிரியான உரையாடலின் நடுவே வருகிறது என்பதை படம் வெளிவந்தால்தான் தெரிந்து கொள்ள முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்