ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி, வானம் பார்த்த பூமி என அழைப்பது வழக்கம். கமுதி அருகே வல்லந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையில் ஐஃபோன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
மலைப் பிரதேசங்களில் விளையும் காய்கறிகளைத் தனது விவசாய நிலத்தில் விளைவிக்கத் திட்டமிட்டார். யூடியூப் பார்த்து ஒரு ஏக்கர் நிலத்தில் காலிஃபிளவர் சாகுபடி செய்துள்ளார். விளைவித்த காலிஃபிளவர்களை கமுதி, அருப்புக்கோட்டை, பரமக்குடியில் விற்பனை செய்கிறார்.