உலகிலே பிரம்மாண்ட தொலைநோக்கி கருவி

ஞாயிறு, 3 ஜூலை 2016 (19:23 IST)
உலகிலே மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை பொருத்தும் பணியை சீனா முடித்திருக்கிறது.


 

 
சீனாவின் தென் மேற்கு மாகாணமான குவிஷொவில் உள்ள மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத கிண்ணத்தின்(டிஷ்) நடுப்பகுதியில் இறுதிப் பாகம் பொருத்தப்பட்டது.
இந்த ரேடியோ தொலைநோக்கியில் உள்ள பிரதிபலிப்பான் 500 மீட்டர்கள் விட்டம் கொண்டது.
 
முப்பது கால்பந்து மைதான அளவுக்கு இது சமமானது. இந்த தொலைநோக்கியை உருவாக்க ஐந்தாண்டுகள் ஆன நிலையில், செப்டம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்தான புரிதல்களை மேம்படுத்திக்கொள்ளவும் , மர்மமான பொருட்களை தேடவும் , வேற்றுக் கிரக ஜீவராசிகள் குறித்த தேடுதல்களை விரிவுபடுத்தவும் இது உதவும் என்று இத்திட்டத்தின் பின் உள்ளவிஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்