பெண்களின் பணி வாழ்க்கையை தடுக்கும் 5 பழக்கங்களும், மாற்றும் வழிமுறைகளும்
வெள்ளி, 31 மே 2019 (21:35 IST)
உலக அளவில் காணப்படும் பொருளாதார வாய்ப்புகளின் பாலின வேறுபாட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கு 202 ஆண்டுகளாகும். கடந்த ஆண்டு உலகப் பொருளாதார மன்றம் இந்த தகவலை தெரிவித்த்து.
பணியிடங்களில் ஆண்களையும், பெண்களையும் அமர்த்துவதால் ஏற்படும் வியாபார நன்மைகளை சுட்டிக்காட்டி பல ஆய்வுகள் வெளியான பின்னர்தான் இந்த கருத்து வெளிவந்துள்ளது.
எனவே, பெண்கள் தங்களின் பணி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவும் வகையில் தலைமைப்பண்பு பயிற்சியாளர் சால்லி ஹெல்கிசென் வழங்கியுள்ள 5 குறிப்புகளை பார்ப்போம்.
1. உங்களின் சொந்த சாதனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்கள் சாதனைகளை பிறராக முன்வந்து பாராட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள் செய்யும் தவறு என்கிறார் சால்லி ஹெல்கிசென்.
ஆனாலும், தங்களின் சாதனைகள் பற்றி அதிகம் பேசாத மக்களை சந்திப்பதாகவும், இவ்வாறு இருப்பதற்கு அவர்கள் இரண்டு விளக்கங்களை அளிப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
"முதலாவதாக, நான் நல்ல பணிகள் செய்தால், மக்கள் கவனம் செலுத்த வேண்டுமென நான் நினைக்கிறேன்" என்று அவர்கள் கூறவதாக சொல்கிறார் சால்லி ஹெல்கிசென்.
"பிறரின் கவனத்தை பெற வேண்டும் என்பதற்காக அரங்கை அதிர வைக்குமளவுக்கு நான் செயல்பட வேண்டுமென்றால், நான் கவனம் பெறாமலேயே இருந்து விடுகிறேன்" என பிறர் கூறுவதாக தெரிவிக்கிறார் சால்லி ஹெல்கிசென்.
எனவே, இதனை எவ்வாறு மாற்றலாம்?
"வலிமையான திறன் ஒன்றை இனம் காணுங்கள்" எடுத்துக்காட்டாக, இந்த நிறுவனத்தோடு எந்த அளவுக்கு நான் ஈடுபாட்டோடு இருக்கிறேன் என்பதுபோல, எனது அதிகாரி சரியாக புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். எனவே, வாரத்திற்கு ஒருமுறை இந்த வாரத்தில் நான் பேசியுள்ள முக்கிய நபர்களை பற்றி சுருக்கமாக மின்னஞ்சல் அனுப்ப இருக்கிறேன்"
பெண்களை பொறுத்தமட்டில், இதுவொரு வெற்றிகரமான உத்தி என்கிறார் ஹெல்கிசென்.
2. முடியாது என்று சொல்ல கற்றுக்கொள்
உங்களுடைய பணிவாழ்க்கையில் முன்னதாக மிகவும் உதவியாக இருந்த அணுகுமுறை, நீங்கள் முன்னேறும்போது உங்களுடைய வளர்ச்சியை இடைமறிக்கலாம் என்று ஹெல்கிசென் எச்சரிக்கிறார்.
"நீங்கள் எப்போதும் பிறரை திருப்திப்படுத்த நினைத்தால், பிறரின் பொறுப்பை சுமந்துகொண்டு கடினமான நிலைமை உங்களுக்கு ஏற்படலாம்.
இது என்னால் முடியாது என்று சொல்வதால், மக்கள் தங்களுக்கு ஆதாயமாக உங்களை எடுத்து கொள்ளவும், உங்களுடைய எல்லைகளை மீறவும், அதிக நேரம் வீணாக்கவும் செய்யலாம் என்று ஹெல்கிசென் குறிப்பிடுகிறார்.
3. தலைசிறந்து செயல்படுதல் V ஆபத்தான செயல்பாடுகளை முயற்சித்தல்
"எதையும் மிக சிறப்பாக செய்வோரிடம் இருக்கின்ற ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், வேலைகளை அடுத்தவருக்கு பிரித்து கொடுத்து சிக்கல்களை எதிர்கொள்வதாகும்" என்று ஹெல்கிசென் தெரிவிக்கிறார்.
"ஓ, இதனை நான் செய்திருந்தால் மிகவும் எளிதாக செய்திருக்கலாம் என மக்கள் அடிக்கடி சொல்வதை கேட்டிருக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.
இதனை சமாளிக்க எளிதானதொரு வழியுள்ளது.
"நீங்கள் உங்களுக்கு பதிலாக வேலை செய்ய நியமிக்கும் ஒருவரை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்" என்று ஹெல்கிசென் முன்மொழிகிறார்.
"அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், அவர்கள் செய்த வேலை பற்றி கருத்து தெரிவியுங்கள். அதிலேயே நின்றுவிட வேண்டாம். ஆபத்தான முயற்சிகளை எடுத்து நிறைவேற்றுங்கள்," என்று ஹெல்கிசென் கூறுகிறார்.
இது உங்களுக்கு அசௌகரியமாக தெரிந்தால், ஆபத்தான முயற்சிகளை மேற்கொண்டு செய்யலாம்.
துல்லியமாகவும், சரியாகவும், இருப்பதற்கு வெகுமதி வழங்கப்பட வேண்டுமென நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் விரும்புகின்றனர்.
ஆனால், ஆண்களோ, ஆபத்தான முயற்சிகளை எடுத்து செய்வதற்கும், துணிச்சலுக்கும் வெகுமதி கிடைக்க வேண்டுமென எதிர்பார்கின்றனர்.
4. தவறுகளை கடந்து செல்லுங்கள்
ஆண்களை விட பெண்கள் அவர்களின் தவறுகளை எண்ணி கொண்டே இருந்துவிடுவதுண்டு. இதனால், அவர்கள் தங்களின் பணிகளில் பின்னடைவு அடையலாம்" என்று ஹெல்கிசென் கூறுகிறார்.
"தவறுகள் உங்களையே அழகுப்படுத்தி கொள்ளும் வடிவமாகும்"
மாறாக, உங்களுக்கு ஓர் இடைவெளி அளிக்க வேண்டுமென அவர் பரிந்துரைக்கிறார். நீங்கள் எல்லோரையும்போல மனிதர் என்று கூறிக்கொள்ளுங்கள். தவறுகளை கடந்து செல்லுங்கள்.
5. குறைத்து மதிப்பிடுவதை நிறுத்தவும்
உடல் தோற்றத்திலும், வார்த்தைகளை தெரிவு செய்வதிலும், பெண்கள் தங்களையே சிறுமைப்படுத்தி கொள்ளும் நிலை உள்ளது என்று ஹெல்கிசென் கூறுகிறார்.
மன்னிப்பு கோருவது, ஒரு நிமிடம் உள்ளதா போன்ற சொல்லாடல்களை பயன்படுத்துவது, பிறர் தங்களை அதிகாரத்தோடு நிலைநிறுத்தி கொள்ளும்போது, தாங்கள் அதிகாரத்தோடு உறுதியாக நிற்காமல் போவது போன்றவை பெண்களிடம் பொதுவாக காணப்படும் குணங்கள்.
நீங்கள் உங்களை ஒரு தலைவராக நிலைநிறுத்தி கொள்ள விரும்பினால், உங்கள் இடங்களில், நீங்கள் மதிப்புக்குரியவர், முழுமையானவர், ஒட்டுமொத்தமானவர் என காட்டிக்கொள்ளுங்கள்.