உத்தராகண்ட் மாநிலம் புது தெஹ்ரி மாவட்டத்தில் இயங்கிவரும் ஒரு ஹோட்டலில் சுற்றுலாவுக்கு வந்த தம்பதியர் அறை எடுத்துத் தங்கியுள்ளனர்.அப்போது அறையில் ரகசிய கேமரா இருந்ததைக் கண்டுபிடித்ததை அடுத்து அவர்கள் ஹோட்டல் வரவேற்பாளரிடம் இதுகுறித்து முறையிட்டனர். ஆனால் அவர்கள் இதுகுறித்து உரிய பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
மேலும் ஹோட்டல் அறையில் இருந்த மின்விசிறி, கேமரா, உரிமையாளரின் செல்போன், லேப்டாப் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.