வெனிஸ் நகரின் ரியால்டோ பாலத்தில் அமர்ந்து, காபி தயாரித்துக்கொண்டிருந்த இரு பயணிகளுக்கு, வெனிஸ் அரசு 73,000 இந்திய ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
வெனிஸிலுள்ள நான்கு கிராண்ட் கால்வாய்களில் மிகவும் பழமையானது ரியால்டோ. 32 மற்றும் 35 வயதாகும் இந்த ஜெர்மனியை பயணிகள், தாங்கள் வைத்திருந்த, பயணிகளுக்காக காபி கலண்களில், காபி தயாரித்துக்கொண்டு இருந்ததை, அங்கிருந்த உள்ளூர்வாசிகள் பார்த்துவிட்டு காவல்துறையினரிடம் கூறியதன்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய வெனிஸ் மேயர் லுயிகி புருக்நாரோ, `வெனிஸை மக்கள் மதிக்க வேண்டும். இங்கு வந்து, தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்களை செய்வோர் இதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் செய்த செயலை காவல்துறையிடம் சுட்டிக்காட்டிய உள்ளூர்வாசிகளுக்கு நன்றி. பயணிகள் இருவருக்கும், அபராதம் விதிக்கப்பட்டு, வெனிஸிலிருந்து வெளியேற்றப்படுவர்` என்று தெரிவித்தார்.