ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைத் தளபதி பதவி விலகல்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் உயர் தளபதி தன்னுடைய பதவியில் இருந்து விலகி, பொறுப்புகளை கீழ்நிலை அதிகாரிகளிடம்  ஒப்படைத்தார்.

வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளும் என்று அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கும் நிலையில், அதன் ஒருபகுதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
 
ஜெனரல் ஆஸ்டின் "ஸ்காட்" மில்லர் பதவியில்இருந்து விலகியதன் மூலம் பிராந்தியக் கட்டுப்பாடுகள் ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் வசம் சென்றிருக்கின்றன.
 
பிரிட்டன் உள்ளிட்ட பிற நேட்டோ நாடுகளின் படைகளும் பைடன் விதித்த காலக்கெடுவுக்கு முன்னரே தங்களது படைகளை திரும்பப் பெற்றுவிட்டன.
 
மேற்கத்திய நாடுகளின் படைகள் வெளியேறியிருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் தாலிபன் படையினர் முன்னேறி வருகின்றனர்.
 
திங்கள்கிழமை நடந்த எளிமையான நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய பொறுப்புகளை இரு அமெரிக்க ஜெனரல்களிடம் ஒப்படைத்தார். அவர்களில் ஒருவர்  புளோரிடாவில் இருந்தபடி வெளிநாட்டில் அமெரிக்கப் படைகளை வழிநடத்துபவர். மற்றொருவர் படை விலக்கலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருக்கப்போகும்  சுமார் 650 வீரர்களுக்கு தளபதியாக இருப்பவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்