ஊரடங்கு தேவையில்லை - தீவிரமடையும் போராட்டம்; ஆதரிக்கும் டிரம்ப்

சனி, 18 ஏப்ரல் 2020 (14:02 IST)
நாட்டை முடக்கியதற்கு எதிராக அமெரிக்காவின் சில பகுதிகளில் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டங்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
மிச்சிகன், வெர்ஜினியா மற்றும் மின்னெசோடா போன்ற அமெரிக்கா மாகாணங்களில் முடக்க நிலையைத் தளர்த்துங்கள் என டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
கடுமையான பொருளாதார கட்டுப்பாடுகள் குடிமக்களைப் பாதிக்கின்றன என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர், ஆனால் அவற்றை தளர்த்துவது தொற்றுநோயைப் பரப்பக்கூடும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
 
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,591 ஆக அதிகரித்ததுள்ளது. இதனையடுத்து இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,000 கடந்துள்ளது.
 
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 672,200 என ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன.வட கலிஃபோர்னியா, மிச்சிகன், ஓஹியோ, உட்டா, வெர்ஜினியா உள்ளிட்ட நாடுகளில் தொடக்கநிலையைத் திரும்பிப் பெற வேண்டும் என்பதற்காகப் போராட்டங்கள் நடந்தது.
 
அமெரிக்காவில் ஜனநாயக கட்சியினர் ஆளும் மாகாணங்களிலேயே போராட்டம் நடக்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்