வெரைட்டி வெரைட்டியா கெட் அப் போடும் காவலர்கள்!!

சனி, 18 ஏப்ரல் 2020 (11:37 IST)
கொரோனா குறித்து விழிப்புணர்வு நடத்தும் விதமாக வெரைட்டி வெரைட்டியா கெட் அப் போட்டு வருகின்றனர் காவலர்கள். 

 
கடந்த மாதம் முதலாக இந்தியாவில் தீவிரம் காட்ட துவங்கிய கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
 
மக்கள் இதன் தீவிரத்தை உணராமல் வெளியே சுற்றி வருகின்றனர். எனவே காவலர்கள் பலர் விழிப்புணர்வை மேற்கொள்ளும் பொருட்டு பல முயற்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர். 
 
அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காவலர் ஒருவர் எமதர்ம ராஜா வேடமிட்டு, ஜீப்பில் அமர்ந்தவாரு கொரோனா குறித்த விழிபுணர்வை மக்களுக்கு தெரிவித்தார். இதற்கு முன்னர் பேய் வேடமிட்டு விழிப்புணர்வில் ஈடுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழகத்தில் கொரோனா ஹெல்மெட் அணிந்து போலீஸார் விழிப்புணர்வு மேற்கொண்டது வைரலானது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்