சீனாவில் இன்னொரு விதமான காய்ச்சல் பரவி வருகிறது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி வருகிறது. ஆனால், எந்த நேரத்திலும் இது மனிதர்களைத் தாக்கலாம் என்ற ஆபத்து இருந்து வருகிறது.
இப்போது வரை இதனால் பேராபத்து ஏதும் இல்லை. ஆனால், இதனை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்கிறார் இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் கிம் செள சாங். இந்த வைரஸை G4 EA H1N1 என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள்.