உதாரணமாக, ருமேனியாவை எடுத்துக் கொள்ளலாம். போரின் முதல் எட்டு நாட்களில் அங்கு பயணித்த 200,000 பேரில் 140,000 பேர் பிற நாடுகளுக்குப் புறப்பட்டார்கள்ம் சுமார் 60,000 பேர் மட்டுமே ருமேனியாவில் இருந்ததாக ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
யுக்ரேன் எல்லையிலுள்ள நாடுகள், போரிலிருந்து வெளியேறும் பலருக்கும் முதல் புகலிடமாகச் செயல்படுகின்றன. ஏனெனில், அவர்கள் அங்கிருந்து மற்ற தொலைவிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு பயணிக்கிறார்கள்.