ஒரு பாலினத்தவர் திருமணத்திற்கு சுவிட்சர்லாந்த் அங்கீகாரம்

திங்கள், 27 செப்டம்பர் 2021 (15:01 IST)
சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்று பங்கேற்ற சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் ஒருபால் திருமணத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

 
இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 64 சதவீதம் பேர் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வதற்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனால் ஒரு பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும் இன்னொரு ஐரோப்பிய நாடாகிறது சுவிட்சர்லாந்து. எல்ஜிபிடி உரிமைகளில் இந்த கருத்தறியும் வாக்கெடுப்பு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஒரு பாலின திருமணத்திற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பது பாரம்பரிய குடும்ப அமைப்பை குறை மதிப்புக்கு உட்படுத்தும் என்று பழமைவாத அரசியல் கட்சியினரும், தேவாலயம் செல்லும் வழக்கம் உடையவர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். 2007-ஆம் ஆண்டு முதலே ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் இணையர்களாகப் பதிவு செய்து கொள்ள அந்நாட்டுச் சட்டம் அனுமதி அளிக்கிறது.
 
எனினும் திருமணத்துக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளிட்ட சில உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன. இந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் ஒருபால் திருமணம் அங்கீகாரம் பெற்றுள்ளதை அடுத்து அதற்கான சட்டப்பூர்வ உரிமையை அளிக்கும் உலகின் 30வது நாடாக சுவிட்சர்லாந்து.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்