அதிகமாக தோல்வியை தழுவும் ரஷ்ய ஏவுகணைகள்

வெள்ளி, 25 மார்ச் 2022 (13:46 IST)
ரஷ்ய ஏவுகணைகளின் தோல்வி விகிதம், 60% ஆக இருக்கிறது என்று அமெரிக்க அதிகாரிகள் பலரும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

b
இந்தத் தரவுகளை நேரடியாக எங்கும் உறுதிசெய்ய முடியாதபோதும், ஒருமாத காலமாக நீடிக்கும் யுக்ரேன் மீதான தாக்குதலில், இது ரஷ்யாவுக்கு எவ்வளவு சிரமமானது என்பதைக் காட்டுகிறது.

அமெரிக்க அறிக்கையின்படி, போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யா இதுவரை குறைந்தது 1100 ஏவுகணைகளையாவது யுக்ரேனுக்குள் ஏவியிருக்கும். அவற்றில் எத்தனை இலக்கை அடைந்தன என்பதை வெளியில் சொல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவிடம் கேட்டதற்கு இதுவரையில் எந்த பதிலும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்