உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இரு தரப்பிலும் அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மக்கள் பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடி சென்று வருகின்றனர். இந்த போரில் நேட்டோ அமைப்பு வான்வெளி எல்லையை மூட வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து கூறி வருகிறார்.
சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசியுள்ள அவர் “சரியான தடுப்பு நடவடிக்கை இல்லை என்றால் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடங்கும் என கடந்த ஆண்டே நேட்டோ நாடுகளுக்கு நான் எச்சரிக்கை விடுத்தேன். நான் மீண்டும் சொல்கிறேன். நீங்கள் எங்கள் வானத்தை மூடவில்லை என்றால் உங்கள் பிரதேசத்தில் ரஷ்யாவின் ஏவுகணைகள் விழுவதற்கு சிறிது நேரமே ஆகும்” என தெரிவித்துள்ளார்.