BBC தமிழ் இணையதளத்தில் கடந்த சில நாட்களில் வெளியான, நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய செய்திகள்

வெள்ளி, 31 மார்ச் 2023 (22:37 IST)
வணக்கம் நேயர்களே! இந்த வாரம் உங்களுக்கு அருமையானதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இந்த வாரம் உலகமெங்கும் பல்வேறு விடயங்கள் நடந்தன, அவற்றை நாங்கள் தனித்தனி செய்திகளாக வெளியிட்டிருந்தோம்.
 
எனினும், நீங்கள் அவற்றில் சில முக்கியமான செய்திகளை தவற விட்டிருக்கலாம்.கவலை வேண்டாம். உங்களுக்காகவே இந்த வாரத்தில் வெளியான ஐந்து சிறப்பு கட்டுரைகளின் துணுக்குகளை இங்கே ஒரே இடத்தில் தொகுத்தளிக்கிறோம்.
 
நீங்கள் விரும்பும் கட்டுரையை அதற்கு கீழே உள்ள இணைப்பில் கிளிக் செய்து முழுவதும் படிக்க முடியும். பிபிசி தமிழில் நாங்கள் எப்போதுமே செய்திகளை மாறுபட்ட கோணத்தில் அளிப்பதுடன், ட்ரெண்டில் உள்ள செய்திகளை கலவையாக அளித்து வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
 
அந்த வகையில் இந்த வாரம், ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம்: எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்குமா?, போலீஸ் ஏ.எஸ்.பி. கைதிகளின் பல்லை பிடுங்கிய குற்றச்சாட்டு: எங்கே தவறு நடந்தது? எப்படி இந்த நிலை மாறும்?, வியட்நாம் போர் முடிந்து 50 ஆண்டுகள்: அற்ப காரணங்களால் தோற்றுப் போன அமெரிக்கா, "பாலிவுட்டில் நடந்த அரசியல்களை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை" - உண்மையை உடைத்த பிரியங்கா சோப்ரா, ஐபிஎல் புதிய விதிகள்: போட்டிகளை மேலும் விறுவிறுப்பாக்க வரும் இம்பாக்ட் பிளேயர் என்பன உள்ளிட்ட ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
 
டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதையடுத்து ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக டெல்லி தெருக்களில் காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர்களை ஒட்டத் தொடங்கினர்.
 
ஆனால் ராகுல் காந்தியை விமர்சித்த கட்சிகளும்கூட, அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பு விஷயம் தொடர்பாக அவருக்கு ஆதரவளித்தன.
 
குற்ற வழக்குகளில் புகாருக்கு உள்ளாகி, விசாரணைக்காக அழைத்துவரப்படும் நபர்களின் பற்களை கொடூரமான முறையில் பிடுங்கியதாக அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்பீர்சிங் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார்.
 
இதையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
 
என்ன நடந்தது? முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
 
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா, உலகின் முதன்மையான பொருளாதார சக்தியாக மாறியது என்பதும் அதன் இராணுவமும் அதே போல சக்திவாய்ந்ததாகக் கருதப்பட தொடங்கியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
 
 
இந்தியாவில் முக்கிய நடிகையாக வலம்வந்த பிரியங்கா சோப்ரா, கடந்த சில ஆண்டுகளாக ஹாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
 
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்க பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் அவர், ”பாலிவுட்டில் நடந்த அரசியல்களை என்னால் சமாளிக்க முடியவில்லை என்பதால் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
 
ஐ.பி.எல். 2023 தொடர் ரசிகர்களுக்கு இன்னும் சுவாரசியமான ஒன்றாக இருக்கப் போகிறது.
 
கொரோனா பேரிடருக்குப் பின்னர் அனைத்து அணிகளும் சொந்த மைதானத்தில் சொந்த ரசிகர்களின் ஆர்ப்பரிப்பை முதன் முறையாக காணப் போகின்றன. இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு அணியும் சொந்த மைதானத்திலும், எதிரணி மைதானத்திலும் தலா ஒரு போட்டிகளை விளையாடும் வழக்கம் மீண்டும் வருகிறது.
 
ஐ.பி.எல். தொடரில் என்னென்ன புதிய மாற்றங்கள் வரவிருக்கின்றன என்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்