வியாழன் கிரகத்தில் ஒளிரும் கிரீடமாய் ஜொலிப்பது என்ன?

வெள்ளி, 1 ஜூலை 2016 (14:56 IST)
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஜூபிடர் (வியாழன்) கிரகம் அதன் தலையில் ஒரு ஒளிக்கிரீடத்தை சுமந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.


நன்றி: NASA

 
ஹபிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜூபிடரின் துருவங்களில் காணப்படும் அரோரா என்ற ஒளிக்கோவை அழகாக பிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஒளிக்கோவைகள் அதிக சக்தியுள்ள அணுவை விட சிறிய துகள்கள் விண்வெளியில் பறக்கும்போது அவை இந்த கிரகத்தின் காந்தப் புலத்தால் பிடிக்கப்பட்டு கிரகத்தின் வட அல்லது தென் துருவத்துக்கு தள்ளப்படும்போது நிகழ்கின்றன.
 
சூரியக் குடும்பத்தில் மிகப்பெரியதான ஜூபிடர், பூமியைவிட ஆயிரம் மடங்குக்கும் அதிக கொள்ளளவு கொண்டது. சூரியனிடமிருந்து ஐந்தாவது வளையத்தில் இருக்கும் ஜூபிடரில் திடமான மேற்பரப்பு இல்லாமல், பிரதானமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களையே கொண்டதால், இது வாயுக்கிரகம் என்று அழைக்கப்படுகிறது.
 
திரவ நிலையில் உள்ள உலோகத்தன்மை வாய்ந்த ஹைட்ரஜன் இந்தக் கிரகத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஹைட்ரஜன் தான் ஜூபிடரின் தீவிரமான காந்தப் புலத்தை உருவாக்குவதாகக் கருதப்படுகிறது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்