2015ஆம் ஆண்டு இரான், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கையெழுத்திட்ட சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு, அணுசக்தி ஒப்பந்தத்தின் எல்லா அம்சங்களும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று இரான் அறிவித்தது.
அணு ஆயுதம் ஒன்றை தயாரிக்க இரான் 1,050 கிலோ வரையிலான 3.67% செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை தயாரிக்க வேண்டும். மேலும் அதை 90% செறிவூட்ட வேண்டும் என அமெரிக்காவை சேர்ந்த ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.