கலிஃபோர்னியா: 300 ஆண்டுகள் பழமையான ஆண்குறி வடிவ மீன்கள் தென்பட்டது எப்படி?

சனி, 14 டிசம்பர் 2019 (21:23 IST)
ஆண்குறியைப் போன்று தோற்றமளிக்கும் உயிரினம்
 
அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியை ஒட்டியுள்ள கடற்கரையில் ஆண்குறியைப் போன்று தோற்றமளிக்கும் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் தென்பட்டன.
இந்த உயிரினங்கள் 'யுரிசெஸ் காப்போ' என்றழைக்கப்படும் பருமனான புழுக்கள் ஆகும். இந்த வகை புழுக்கள் மண்ணுக்குள் புதைந்து கொள்ளும். சமீபத்தில் வந்த புயலின் காரணமாக சான்ஃப்ரான்சிஸ்கோவின் வடக்கு பகுதியிலுள்ள ட்ரேக்ஸ் கடற்கரையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் இந்த உயிரினங்கள் காணப்பட்டன.
 
இந்த உயிரினங்களின் உடலமைப்பு மண்ணுக்கடியில் புதைந்து வாழ்வதற்கு ஏதுவாக உள்ளது என்கிறார் உயிரியலாளர் இவான் பார்.
 
இவை 300 ஆண்டுகள் பழமையான உயிரினம் என்பதற்கான தொல்பொருள் சான்று இருக்கிறது. மேலும் இவற்றில் சிலவை 25 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை எனக் கூறுகிறார் இவான் பார்.
 
கடற்கரையில் ஆங்கில எழுத்து `யு` வடிவிலான பல அடிகள் நீளமுள்ள வளைகளை இந்த உயிரினங்கள் தோண்டுகின்றன.
 
இந்த உயிரினங்கள் இவ்வாறு பூமிக்கடியில் சென்று வாழ்வதாலும் மற்ற உயிரினங்களுக்கு வளைகள் தோண்டுவது மூலம் நிலத்தடியில் பாதையை ஏற்படுத்துவதாலும் ஆங்கிலத்தில் “விடுதிகாப்பான்” என்ற பொருளில் இந்த புழுக்கள் அழைக்கப்படுகின்றன.
 
மீன்கள், சுறாக்கள் மற்றும் நீர்நாய்கள் போன்றவை இந்த புழுக்களை உண்ணுகின்றன.
 
இது மனித உணவாகவும் கருதப்படுகிறது. கிழக்கு ஆசியாவில் காணப்படும் யுரேசிஸ் யுனிசின்க்டஸ் வகை தென் கொரியா போன்ற நாடுகளின் சுவையான உணவாக கருதப்படுகிறது.
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

What’s the worst thing you’ve eaten? #Seafood #SpoonWorm #gaebul #Seoul #Korea #Noryangjin #market #yum #gross #weird #food #Yeouido #fishmarket #63building #skyfarm #delicacy

A post shared by Thor (@thorzuroff) on

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்