இஸ்ரேலை அழிக்க நினைக்கும் ஹெஸ்புல்லா அமைப்பு உருவானது எப்படி?
வியாழன், 19 அக்டோபர் 2023 (21:35 IST)
ஹெஸ்பொல்லா என்பது இரான் ஆதரவு கொண்ட ஷியா இஸ்லாமிய அரசியல் கட்சி மற்றும் லெபனானில் உள்ள துணை ராணுவக் குழு ஆகும். இது 1992 முதல் ஹசன் நஸ்ரல்லாவால் வழிநடத்தப்படுகிறது. ஹெஸ்பொல்லா என்ற பெயரின் பொருள் கடவுளின் கட்சி.
கடந்த 1980களின் முற்பகுதியில் லெபனான் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருந்தபோது இரானின் நிதி மற்றும் ராணுவ உதவியுடன் ஹெஸ்புல்லா உருவாக்கப்பட்டது.
லெபனானின் பாரம்பரியமாக இருந்த அதிகாரமிழந்த ஷியாக்களை தெற்கில் பாதுகாப்பதற்கான ஒரு சக்தியாக அது இருந்தது. அதன் கருத்தியல் வேர்கள் 1960 மற்றும் 1970களில் லெபனானில் ஷியா இஸ்லாமிய மறுமலர்ச்சி வரை நீண்டுள்ளது.
இஸ்ரேல் 2000ஆம் ஆண்டில் பின்வாங்கிய பிறகு, ஹெஸ்புல்லா நிராயுதபாணி ஆக்குவதற்கான அழுத்தத்தை எதிர்த்த ஹெஸ்புல்லா, அதன் ராணுவப் பிரிவையும் வலுப்படுத்தியது.
இந்தக் குழு, ரெசிஸ்டன்ஸ் பிளாக் (Resistance Bloc) கட்சிக்கு ஆதரவாக இருந்ததன் மூலம், படிப்படியாக லெபனானின் அரசியல் அமைப்பில் முக்கிய அதிகார மையமாக மாறியது. மேலும், அமைச்சரவையின் முடிவை நிராகரிக்கும் அதிகாரத்தையும் அந்தக் குழு திறம்படப் பெற்றுள்ளது.
பல ஆண்டுகளாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிரான குண்டுவீச்சுகள் மற்றும் சதித் திட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதாக ஹெஸ்பொல்லா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஹெஸ்பொல்லாவை, மேற்கத்திய நாடுகள், இஸ்ரேல், வளைகுடா அரபு நாடுகள் மற்றும் அரபு லீக் ஆகியவை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.
சிரியாவின் அதிபர் பஷர் அல்-அசாத்தின் கூட்டாளியான ஹெஸ்புல்லா, 2011ஆம் ஆண்டு சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரின்போது அசாத்துக்காக போரிட ஆயிரக்கணக்கான போராளிகளை அனுப்பியது. மோதல் தீவிரமடைந்ததால், அங்குள்ள ஆயுதக்குழுக்களிடம் இழந்த நிலத்தை மீட்க அரசாங்கப் படைகளுக்கு ஹெஸ்புல்லா குழுவைச் சேர்ந்தவர்கள் உதவியுள்ளனர்.
இரான் மற்றும் ஹெஸ்புல்லா ஆயுதக்குழுவினருடன் தொடர்பில் உள்ள சிரியாவை அடிக்கடி இஸ்ரேல் தாக்குகிறது. ஆனால், அவற்றை எப்போதாவதுதான் ஒப்புக்கொள்கிறது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதியன்று அன்று பாலத்தீனிய ஆயுதக்குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் குறைந்தது 1,400 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, ஹெஸ்பொல்லாவும் இஸ்ரேலும் தங்களது எல்லைகளைக் கடந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் காஸா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி, ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றது. அப்போது, இஸ்ரேலுக்கு எதிரான போரில் பங்களிக்க "முழுமையாக தயார்" என்று ஹெஸ்புல்லா குழு கூறியது.
ஹெஸ்புல்லாவின் ராணுவம், பாதுகாப்பு, அரசியல் செல்வாக்கு மற்றும் அது வழங்கும் சமூக சேவைகள் ஒரு நாட்டிற்குள் உள்ள ஒரு நாடாக அதன் நற்பெயரை நிலைநிறுத்தியுள்ளது. அரசாங்க நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்த அமைப்பு உள்ளது.
சில வழிகளில், அதன் திறன்கள் இப்போது லெபனான் ராணுவத்தைவிட அதிகமாக உள்ளன. சில லெபனானியர்கள் ஹெஸ்புல்லாவை நாட்டின் நிலையான தன்மைக்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றனர். ஆனால், இது ஷியா சமூகத்தினுள் தொடர்ந்து பிரபலமாகவே உள்ளது.
ஹெஸ்புல்லா ஆரம்பிக்கப்பட்ட காலத்தைக் கணிப்பது சற்று கடினமான ஒன்றுதான். ஆனால், 1982இல் பாலத்தீன ஆயுதக்குழுவின் தாக்குதல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக தெற்கு லெபனான் பகுதியில் இஸ்ரேலிய படையெடுப்பின்போது, ஹெஸ்புல்லாவின் ஆரம்பக்காலம் வெளிப்பட்டது.
இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்பதற்காக அமல் இயக்கத்திலிருந்து பிரிந்த ஒரு ஆயுதக்குழுவிற்கு ஷியா இஸ்லாமிய தலைவர்கள் ஆதரவளித்தனர்.
புதிய அமைப்பாக உருவான இஸ்லாமிய அமல், இரானின் புரட்சிகர அமைப்பிடமிருந்து ஆதரவைப் பெற்றது. மிகவும் முக்கியமான அமைப்பாக உருவான ஷியா ஆயுதக்குழு, ஹெஸ்புல்லா என்று பின்னர் அறியப்பட்டது.
வீரப்பன்: கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? ராஜ்குமாரை விடுவிக்க காவிரி நீர் கேட்க காரணம் யார்?
லெபனானின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த 1989 தைஃப் உடன்படிக்கை ஹெஸ்புல்லா ஆயுதக்குழுவை, ஆயுதங்களைக் கைவிடும்படி கூறியது.
புதிதாக உருவான இந்த ஹெஸ்புல்லா ஆயுதக்குழு, இஸ்ரேலிய ராணுவம், அதன் நட்பு சக்தியான தெற்கு லெபனான் ராணுவம் மற்றும் லெபனானில் உள்ள பிற வெளிநாட்டு சக்திகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க கடற்படை முகாம்கள் மீது 1983ஆம் ஆண்டு குண்டுவீசி தாக்குதல் நடத்தியதன் பின்னணிய்கல் ஹெஸ்புல்லா ஆயுதக்குழு இருந்ததாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 258 அமெரிக்கர்கள் மற்றும் 58 பிரெஞ்சு படை வீரர்கள் இறந்தனர். இதனால், மேற்கத்திய அமைதிப்படைகள் பின்வாங்கின.
ஹெஸ்புல்லா 1985ஆம் ஆண்டில், தனது ஸ்தாபனத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அமெரிக்காவையும் சோவியத் யூனியனையும் இஸ்லாத்தின் பிரதான எதிரிகளாக அடையாளப்படுத்தி, முஸ்லீம் நிலங்களை ஆக்கிரமிப்பதாகக் கூறி இஸ்ரேலை "அழிக்க" அழைப்பு விடுத்து ஒரு "திறந்த கடிதத்தை" வெளியிட்டது.
மேலும், "இஸ்லாமிய முறையை மக்கள் சுதந்திரமான மற்றும் நேரடியான தேர்வின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள வேண்டும், வலுக்கட்டாயமாகத் திணிப்பதன் அடிப்படையில் அல்ல," என்றும் அது அழைப்பு விடுத்தது.
லெபனானின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த 1989 தைஃப் உடன்படிக்கை ஹெஸ்புல்லா ஆயுதக்குழுவை, ஆயுதங்களைக் கைவிடும்படி கூறியது.
இதனால், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட "இஸ்லாமிய எதிர்ப்பு" படையாக அதன் ராணுவப் பிரிவை மறுபெயரிட ஹெஸ்புல்லாவை தூண்டியது.
சிரியா ராணுவம் 1990இல் லெபனான் மீது அமைதியைத் திணித்த பிறகு, தெற்கு லெபனானில் ஹெஸ்புல்லா தனது கெரில்லா போரைத் தொடர்ந்தது. லெபனான் அரசியலிலும் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கியது.
கடந்த 1992ஆம் ஆண்டில், அது முதன்முறையாக தேசிய தேர்தல்களில் வெற்றிகரமாகப் பங்கேற்றது. இறுதியாக 2000இல் இஸ்ரேலிய படைகள் பின்வாங்கியபோது, அவர்களை வெளியேற்றிய பெருமையை ஹிஸ்புல்லா பெற்றது.
ஷெபா பண்ணைகள் மற்றும் பிற பகுதிகளில் இஸ்ரேலியர்கள் தொடர்ந்து இருப்பதைக் காரணம் காட்டி, ஆயுதங்களை கைவிடக் கோரிய அழுத்தங்களை அந்த ஆயுதக்குழு எதிர்த்தது. மேலும், தெற்கில் தங்களின் ஆயுதக்குழுவின் இருப்பையும் உறுதி செய்தது.
ஹெஸ்பொல்லா ஆயுதக்குழுவினர் 2006ஆம் ஆண்டில், எல்லை தாண்டிய தாக்குதலைத் தொடங்கினர். அதில் எட்டு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் கடத்தப்பட்டனர். இதனால், இஸ்ரேல் பதிலடி கொடுக்கத் தயாரானது.
இஸ்ரேலிய போர் விமானங்கள் தெற்கிலும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள ஹெஸ்புல்லாவின் கோட்டைகளை நோக்கி குண்டுகளை வீசின. அதேநேரத்தில் ஹெஸ்புல்லா, இஸ்ரேல் மீது சுமார் 4,000 ராக்கெட்டுகளை ஏவியது.
இப்படித் தொடர்ந்து 34 நாட்கள் நடந்த மோதலில் 1,125க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் இறந்தனர். இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 119 பேரும், 45 பொதுமக்களும் இதில் இறந்தனர்.
மதுரையில் மீண்டும் கிரானைட் குவாரிகள் - 11 ஆண்டுக்கு முன் மூடச் செய்த சகாயம் என்ன சொல்கிறார்?
2009 தேர்தலில், ஹெஸ்புல்லா அமைப்பு நாடாளுமன்றத்தில் 10 இடங்களை வென்று, ஐக்கிய அரசாங்கத்தில் நீடித்தது.
ஹெஸ்புல்லா முக்கியத்துவம் பெற்றது எப்படி?
லெபனானின் மேற்கத்திய ஆதரவுடைய அரசாங்கம் 2008ஆம் ஆண்டில், ஹெஸ்பொல்லாவின் தனியார் தொலைத்தொடர்பு வலையமைப்பை மூடுவதற்கு முயன்றது.
மேலும், பெய்ரூட் விமான நிலையத்தின் பாதுகாப்புத் தலைவர், ஹெஸ்புல்லா ஆயுதக் குழுவுடன் தொடர்பில் இருந்த காரணத்திற்காக அவரை பதவியில் இருந்து அகற்றவும் முடிவு செய்தது.
இதற்கு எதிர்வினையாற்ற முடிவு செய்த ஹெஸ்புல்லா ஆயுதக்குழு, லெபனான் தலைநகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றி, தனது போட்டியாளரான சுன்னி இஸ்லாமிய குழுக்களுடன் போரிட்டது.
இரு தரப்பினருக்கும் நடந்த இந்த மோதலில் சுமார் 81 பேர் இறந்த பிறகு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது, அரசுக்கும் ஹெஸ்புல்லா ஆயுதக் குழுவினருக்கும் இடையே அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, ஹெஸ்புல்லா அமைப்பு, அமைச்சரவையின் முடிவை எதிர்க்கவும், மீறவும் உரிமை வழங்கப்பட்டது.
அதன் பிறகு நடந்த 2009 தேர்தலில், ஹெஸ்புல்லா அமைப்பு நாடாளுமன்றத்தில் 10 இடங்களை வென்று, ஐக்கிய அரசாங்கத்தில் இடம் நீடித்தது.
டிசம்பர் 2020இல், ஹெஸ்புல்லா உறுப்பினர் சலீம் அய்யாஷ் கொலையில் ஈடுபட்டதற்காக ஐ.நா ஆதரவு பெற்ற லெபனானுக்கான சிறப்பு தீர்ப்பாயத்தால் ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த ஆண்டின் இறுதியில், ஹெஸ்புல்லா அமைப்பின் செயலாளர் ஷேக் ஹசன் நஸ்ரல்லா ஒரு புதிய அரசியல் அறிக்கையை வெளியிட்டார். அது குழுவின் "அரசியல் பார்வையை" வெளிப்படுத்தியது.
கடந்த 1985ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில் காணப்பட்ட இஸ்லாமியக் குடியரசு பற்றிய குறிப்பை அது கைவிட்டது. ஆனால், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராகக் கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தது. அதோடு ஹெஸ்புல்லா தனது ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறியது.
ஹெஸ்புல்லா குழுவும் அதன் கூட்டாளிகளும் 2011ஆம் ஆண்டில், சௌதி ஆதரவு பெற்ற சுன்னி முஸ்லீம் சாத் ஹரிரி தலைமையிலான ஐக்கிய அரசாங்கத்தைத் தகர்த்தனர்.
டிசம்பர் 2020இல், ஹெஸ்புல்லா உறுப்பினர் சலீம் அய்யாஷ் கொலையில் ஈடுபட்டதற்காக ஐ.நா ஆதரவு பெற்ற லெபனானுக்கான சிறப்பு தீர்ப்பாயத்தால் ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஹெஸ்புல்லாவும் அதன் கூட்டாளிகளும் அடுத்தடுத்த அரசுகளில் கணிசமான செல்வாக்குடன் தொடர்ந்து அங்கம் வகித்தனர்.