இந்தப் பள்ளியில் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பாடத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ஆர்எஸ்கே பள்ளியை நிர்வகிக்க 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் கல்வி நிறுவனங்கள் ஒப்பந்தம் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. தற்போது ஆர்.எஸ்.கே., பள்ளியைடி.ஏ.வி., எனப்படும் தயானந்த ஆங்கில வேதிக் பள்ளி 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து பள்ளியை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பள்ளியில் இந்தி மொழியில் நமஸ்தே நமஸ்காரம் சொல்லும் வழக்கத்தை திணிப்பதைக் கண்டித்தும் மதம் சார்ந்த கடவுள் வழிபாட்டை ஊக்குவிப்பதற்கும்தமிழ் பாடத்தைத் தடை செய்யும் போக்கு, இந்தி மொழி திணிப்பு, சிப்ட் முறையில் வகுப்புகள் ஆகியவற்றைக் கண்டித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்ற திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் கபிலன் தலைமையில் ஆர் எஸ் கே பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், திராவிட கழகம், மதிமுக மற்றும் தமிழ் தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.