முதலில் பூச்சி இனம், அடுத்து மனித குலமா? - எச்சரிக்கும் ஓர் ஆய்வு

செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (16:31 IST)
மனித செயல்பாடுகளால் ஒரு நூற்றாண்டு காலக்கட்டத்திற்குள் உலகில் உள்ள பூச்சி இனங்கள் முழுவதுமாக அழியலாம் என்கிறது ஓர் ஆய்வு முடிவு.
 
பயாலஜிகல் கன்சர்வேஷன் எனும் சஞ்சிகையில் வெளியான ஆய்வு, இந்த அழிவு தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால், இது மோசமான விளைவுக்கு வித்திடும். மனிதர்கள் வாழ்வதே கேள்விகுறியாகும் என்கிறது.
 
தீவிர விவசாயம்தான் இதற்கு முதன்மை காரணம் என்று கூறும் ஆய்வு, பருவநிலை மாற்றமும், நகரமயமாக்கலும் பிற காரணிகள் என்கிறது. 
 
ஒரு ஆண்டுக்கு 2.5 சதவீதத்தில் பூச்சிகள் மறைவதாகவும், பிரிட்டன்தான் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள் அவர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்