பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட சிறுவனை மூத்தவராகக் கருதி விசாரிக்க பரிந்துரை

வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (21:25 IST)
இந்தியாவில் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்கு உள்ளான 17 வயது சிறுவனை வயதுக்கு வந்தவராக கருதி விசாரிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
 

 
பாலியல் வல்லுறவு வழக்கு ஒன்றில் முதன் முறையாக அதில் சம்பந்தப்பட்ட சிறுவர், விசாரணைக்காக வயது வந்தோருக்கான நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
 
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின்படி இது சாத்தியமாகி உள்ளது.
 
இதற்கு முன்னர், 18 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் அதிகபட்சமாக மூன்று ஆண்டு சிறை தண்டனை பெற்று, சிறையில் இல்லாமல், சிறுவர் சீர்திருத்த மையங்களில் தண்டனை அனுபவித்து வந்தனர்.
 
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவத்தில், 18 வயதுக்குக் குறைவான சிறுவனும் ஈடுபட்டிருந்தது உறுதி செய்ததை அடுத்து, சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தீவிரமான குற்றங்களுக்கு இந்த சட்டத்திருத்தம் பொருந்தும்.
 
மேலும், இது ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றிற்கும் பிரயோகப்படுத்தப்பட்டு உள்ளது.
 
17 வயது பள்ளி மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக அந்த சிறுவன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அந்தக் குற்றத்துக்காக, மூத்தவராகக் கருதி விசாரிக்க அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்