பிட்காயின் கொள்ளை: இதுவரை இல்லாத அளவுக்கு 5 பில்லியன் டாலர் பறிமுதல்
புதன், 9 பிப்ரவரி 2022 (17:30 IST)
கடந்த 2016ஆம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்ட 5 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பிட்காயினை அமெரிக்க நீதித்துறை பறிமுதல் செய்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவில் நடந்த மிகப்பெரிய பறிமுதல் ஆகும்.
மேலும், கிட்டத்தட்ட 1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள பிட்காயின் தொகையை சட்டப்பூர்வப் பணமாக மாற்ற முயன்றதாக செவ்வாய்க்கிழமையன்று இரண்டு பேரை அமெரிக்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
2016ஆம் ஆண்டில் கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை ஹேக் செய்து, ஒரு ஹேக்கர் திருடிய இந்த தொகையின் மதிப்பு சுமார் 71 மில்லியன் டாலராக இருந்தது.
ஆனால், பிட்காயினின் மதிப்பு தற்போது அதிகரித்துள்ளதால், அதன் மதிப்பு இப்போது 5 பில்லியன் டாலருக்கும் மேலாக உள்ளது.