லாஸ் ஏஞ்சல்ஸில் கழிவு நீர்க் குழாய் உடைப்பு; கடற்கரை மூடப்பட்டது

புதன், 20 ஜூலை 2016 (11:22 IST)
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெரும் கழிவு நீர்க் கசிவு ஒன்று ஏற்பட்டதை அடுத்து, நகரின் தென்புறம் இருக்கும் லாங் பீச் கடற்கரைப் பகுதியை அதிகாரிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மூடிவிட்டனர்.


 


சேதமடைந்த கழிவுநீர்க் குழாய் ஒன்றை செவ்வாய்க்கிழமை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அது உடைந்து ஒன்பது மிலியன் லிட்டர்களுக்கும் மேலான கழிவு நீரை லாஸ் ஏஞ்சல்ஸ் ஆற்றுக்குள்ளும், அதன் கீழ்ப்பகுதியில் பசிபிக் பெருங்கடலுக்குள்ளும் திறந்துவிட்டது.

இந்த உடைப்பெடுப்புக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த கழிவு நீர்ப் பாதை 1929ல் கட்டப்பட்டது. கடற்கரைப் பகுதிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் அனுமதிக்கப்படும் முன்னர், இரண்டு சுத்த நீர் மாதிரிகள் பெறப்படவேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த கடற்கரைப் பகுதிகள் குறைந்தபட்சம் வியாழக்கிழமைவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.



வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்