சுய விளம்பரம்? தன்னைத் தானே புகழ்ந்து கொண்ட டிரம்ப்

செவ்வாய், 9 ஜூலை 2019 (15:30 IST)
எனது அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னைத் தானே புகழ்ந்துக் கொண்டார். 
 
ஆம், சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் தமது அரசாங்கம் சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னைத் தானே புகழ்ந்துக் கொண்டார். அதே நேரம் ஜனநாயகக் கட்சியினர் இந்த விஷயத்தில் மிக மோசமாக செயல்படுவதாக விமர்சித்தார். 
 
காற்று மற்றும் நீரின் தரத்தை தமது திட்டங்கள் மேம்படுத்தியதாக புகழ்ந்து கொண்ட அவர், ஆற்றல் துறையில் தமது நிர்வாகம் பல வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாக பெருமையாகப் பேசினார்.
 
பருவநிலை தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது சரியே என்றும் அவர் வாதிட்டுள்ளார். பருவநிலை தொடர்பான டிரம்ப்பின் நிலைப்பாட்டை சூழலியலாளர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்