அந்த சிறுமியின் தாய் தனது மகளுக்கு ''கெட்ட ஆவி பிடித்துள்ளது'' என்று நம்பியதாகவும் அதனால் தனது மகளை அதுபோன்ற சடங்குகளைச் செய்யும் ஒரு பெண்ணிடம் அழைத்துச் சென்றதாகவும் காவல் துறை தெரிவிக்கிறது. இந்த சடங்கின் பொழுது, பிரம்பால் தாக்குதலுக்கு உள்ளான சிறுமி மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்பு அங்கு அவர் உயிரிழந்தார்.
அந்த சிறுமியின் நெற்றியில் எண்ணெய் தேய்க்கப்பட்டு, அவர் பிரம்பால் தாக்கப்பட்டார் என்று காவல் துறையினர் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அழுகுரல் கேட்டு அந்தச் சிறுமியைப் பாதுகாக்க அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் அச்சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்று ஏ.எஃப்.பி செய்தி முகமை தெரிவிக்கிறது.