கலிஃபோர்னியா காட்டுத்தீயால் 8 லட்சம் பேர் இருளில் தவிப்பு

வியாழன், 10 அக்டோபர் 2019 (12:04 IST)
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க 8 லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் என பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
 
சான்ஃபிரான்ஸிஸ்கோவின் கடற்கரை பகுதியின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் கோபத்தில் ஆழ்ந்தனர்.
 
அங்கு மின்சாரம் விநியோகிக்கும் நிறுவனமான பசிஃபிக் கேஸ் மற்றும் எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த மின்சார துண்டிப்பு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
 
அந்த நிறுவனத்தின் மின்சார கம்பிகளால் கடந்த வருடம் இதுவரை இல்லாத அளவு ஏற்பட்ட காட்டுத்தீ ஏற்பட்டது. அதிகபடியான காற்றடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், மேலும் காட்டுத்தீ பரவாமல் இருப்பதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 
அந்த பகுதியில் கடந்த வருடம் நடைபெற்ற காட்டுத்தீ சம்பவத்தால் 150,000 ஏக்கர் நிலம் தீயில் கருகியது. அதில் 86 பேர் உயிரிழந்தனர். 
 
சிஃபிக் கேஸ் மற்றும் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மோசமான உபகரணங்களே இந்த காட்டுத்தீ சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற காட்டுத்தீ சம்பவத்திற்கும் அந்த நிறுவனமே காரணம் என்று கூறப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்