இந்த விபத்து கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு ரஷ்யாவில் ஏற்பட்ட மிக மோசமான சுரங்க விபத்தாக கூறப்படுகிறது. நவம்பர் 25 ஆம் தேதி, வியாழக்கிழமை, மாஸ்கோவிலிருந்து சுமார் 3,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிஸ்ட்வேஸ்னியா (Listvyazhnaya) என்ற சைபீரிய சுரங்கத்தில் காற்றோட்டத்துக்காக சுரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த வாயிற் குழியில் படிந்திருந்த நிலக்கரித் துகள்களில் தீ பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
அவசர உதவி சேவையைச் சேர்ந்த ஓர் அதிகாரி, சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டவர்களில் யாரும் உயிரோடு இல்லை என ஒரு செய்தி முகமையிடம் கூறியுள்ளார். லிஸ்ட்வேஸ்னியா சுரங்கத்தின் இயக்குநர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பிராந்திய ஆய்வுக் குழு கூறியுள்ளது. 49 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.