மதம் மாறிய பெண்ணுக்கு சுடானில் மரணதண்டனை

வியாழன், 15 மே 2014 (17:41 IST)
சுடானில் இஸ்லாமிய மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய பெண் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று, ''மதத்தை கைவிடல்'' குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதித்துள்ளது.

நீ திரும்பி இஸ்லாத்துக்கு வருவதற்கு உனக்கு மூன்று நாள் அவகாசம் தந்தோம், ஆனால், நீ மாறவில்லை, ஆகவே உன்னை சாகும்வரை தூக்கிலிட உத்தரவிடுகிறோம் என்று நீதிபதி அந்தப் பெண்ணிடம் கூறியுள்ளார்.
 
அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு இருக்கும் ''தான் விரும்பும் மதத்தை தழுவிக்கொள்ளும் உரிமையை'' மதிக்குமாறு மனித உரிமை அமைப்புக்களும், மேலை நாட்டுத் தூதரகங்களும் சுடானிய அரசாங்கத்தை கோரியுள்ளன.
 
அந்தப் பெண், குழந்தையைப் பிரசவித்து இருவருடங்கள் ஆகும் வரை, அந்தத் தண்டனை நிறைவேற்றப்படாது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
 
இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையில் ஆட்சி நடத்தும் சுடானில், பெரும்பான்மையானோர் இஸ்லாமியராவர்.
 
திருமணத்துக்கு புறம்பான உறவுக்காக அந்தப் பெண்ணுக்கு அந்த நீதிமன்றம் 100 கசையடிகளையும் தண்டனையாக வழங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்