அயோத்தி ராமஜென்ம பூமி பூஜை நாள் கருப்பு தினமாக கருதப்படுவது ஏன்? #5AugustBlackDay

புதன், 5 ஆகஸ்ட் 2020 (10:51 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #5AugustBlackDay என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
இந்தியா முழுவதும் அயோத்தி ராமஜென்ம பூமி பூஜை நாளான இன்று (ஆகஸ்ட் 5) விமர்சியாக கொண்டாடி வரும் நிலையில், சமூக வலைத்தளமான டிவிட்டரில் #5AugustBlackDay என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பாகிஸ்தான் தனது வரைப்படம் குறித்து பதிவிடப்பட்டு வருகிறது. அதாவது, இந்தியாவிற்குட்பட்ட காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் சில பகுதிகளையும் சேர்த்துக்கொண்டு புதிய வரைபடம் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது பாகிஸ்தான். இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இது பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை குறிப்பதாக கூறியுள்ளார். எனவே இந்த நாள் கருப்பு நாள் என பதிவிட்டு வருகின்றனர். 
 
அதோடு, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தால் அந்நகரே உருக்குலைந்துள்ள புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்தும் இது கருப்பு தினம் என இணையவாசிகள் கூறி வருகின்றனர். 
 
மேலும் ஒரு சிலரும் அயோத்தி ராமஜென்ம பூமி பூஜை நாளையும் கருப்பு தினம் என குறிப்பிட்டு வருகின்றனர். அதோடு #LandOfRavanan என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்