செழிப்பு தரும் செப்டம்பர் மாத ராசிபலன்கள் 2025! – கடகம்

Prasanth K

சனி, 30 ஆகஸ்ட் 2025 (16:43 IST)
செழிப்பையும், செல்வத்தையும் தரும் மாதமான செப்டம்பர் மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்

கிரகநிலை:
ராசியில்  சுக்ரன் - தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  சூர்யன், புதன், கேது - தைரிய வீரிய  ஸ்தானத்தில்  செவ்வாய் - பஞசம  ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம  ஸ்தானத்தில்  சனி (வ), ராஹு - அயன சயன போக  ஸ்தானத்தில்  குரு என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:
11.09.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  புதன் தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
14.09.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய் சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
15.09.2025 அன்று  ராசியில்  இருந்து  சுக்கிரன் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
16.09.2025 அன்று  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன் தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
29.09.2025 அன்று  தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து  புதன் சுக ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
உங்களுக்கு இந்த மாதம் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.  தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். தடைபட்ட ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். அரசியல் துறையினருக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.

புனர்பூசம்:
இந்த மாதம் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். எந்த விஷயமாக இருந்தாலும் முடிவெடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மனதில் குழப்பநிலை நீடிக்கும். மறைந்திருக்கும் எதிரிகளால் தொல்லை ஏற்பட்டாலும் அவர்களால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட முடியாது.

பூசம்:
இந்த மாதம் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றிகளை குவிக்க முடியும். கணவன்-மனைவி உறவு விரிசல் காணும்.  பணப் பற்றாக்குறையால் ,குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் போகும். இதனால் குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாக நேரும். உங்கள் ஆரோக்கியமும் படுத்திக்கொண்டிருக்கும். மருத்துவச் செலவுகள் எகிறும்.

ஆயில்யம்:
இந்த மாதம் உறவுகள் பகையாகும். எதிரிகளின் திட்டம் உங்களை வேதனைக்குள்ளாக்கும். அலுவலக வேலையில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை இருக்கும். உங்களிடம் குறை கண்டுபிடித்து உங்களுக்கு தண்டனை தருவார்கள். வேண்டாத இடமாற்றம் வரும்.  உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பும் இல்லாமல் போகும்.

பரிகாரம்: துர்க்கைக்கு வேப்பிலை அர்ப்பணித்து பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்டகிழமைகள்: திங்கள், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்