செழிப்பையும், செல்வத்தையும் தரும் மாதமான செப்டம்பர் மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்
கிரகநிலை:
ராசியில் குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), ராஹு என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்:
11.09.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து புதன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14.09.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
15.09.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16.09.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சூர்யன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
29.09.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து புதன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
உங்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்களைப் பெற இயலும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும்.
சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். அரசியல் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்கு பெரியோரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது.
மிருகசீரிஷம்:
இந்த மாதம் பகைவர்களின் தொல்லை குறையும். நீதிமன்றத்தில் இதுவரை அலைக்கழித்த வழக்குகள் முடிவடையும். உங்கள் சொத்துக்கள் மீண்டும் உங்கள் கைக்கு வந்து சேரும். வியாபரம் சிறந்து வருமானம் பெருகும். பணம் கையில் சரளமாகப் புரளும். கூட்டுத் தொழில் பார்ட்னர்கள் இன்முகமாய்ப் பழகுவார்கள்.
திருவாதிரை:
இந்த மாதம் சிலர் தங்கள் வசிப்பிடங்களை மாற்றுவர். அடிக்கடி வீடு மாறுவார்கள். பயணங்களின்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். பயணத்தின்போது கைப்பொருள் தொலைந்து போக நேரும். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் வம்பு வழக்குகளில் சிக்கிக்கொள்ள நேரும்.
புனர்பூசம்:
இந்த மாதம் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளாவிட்டால், அரசாங்கத்தால் தொல்லைகள் வரும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளால், பிரச்சினைகளை சந்திப்பார்கள். யாரிடமும் கையூட்டுப் பெறுவதை தவிர்க்கவேண்டும். இல்லையென்றால் காவல்துறையிடம் சிக்கி அவமானப்பட நேரும். வெளிநாட்டுப் பயணம் ,வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
பரிகாரம்: பெருமாளை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.
அதிர்ஷ்டகிழமைகள்: புதன், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 6
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25, 26