ஹரிஹரசுதன் மணிகண்டன் சுவாமி ஐயப்பனை வழிபட உகந்த துதிபாடலாக ஹரிவராசன சரணம் உள்ளது. இதை பாடி சுவாமி ஐயப்பனை துதிப்பது சுவாமியின் பூரண அருளை பக்தர்களுக்கு வழங்குகிறது.
ஆரம்பத்தில் சபரிமலையில் ஒளியாகிய செங்கனூர் கிட்டுமணி திருமேனி நம்பூதிரியாரின் புல்லாங்குழல் இசையை வாசித்து சபரிமலை நடை சார்த்துவது வழக்கமாக இருந்து வந்தது. பின்னர்தான் கம்பங்குடி சுந்தரகுளத்து ஐயர் என்பார் பிரசுரித்து சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் அமைந்த ஹரிவராசன பாடல் கீர்த்தனை சபரிமலை நடை சார்த்தும் முன்னர் பாடும் கீர்த்தனையாக அமைந்தது.