முன் ஜென்ம பாவங்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு தீங்குகளையும், தொல்லைகளையும் அளிக்க கூடியவை. இதற்கான முறையான பரிகாரங்கள் செய்வது ஒருபக்க இருந்தாலும், பாவங்களின் உஷ்ணத்தை குறைக்க அருள் நிறைந்த ஒன்றுதான் ருத்ரசக்தி வில்வ மாலை.
பல்வேறு நலம் தரும் மாலைகளில் ருத்திராட்சம், கருங்காலி மாலை, வில்வ மாலை, துளசி மாலை என பல உள்ளன. சிவனின் அம்சமாக விளங்குவது ருத்திராட்ச மாலை என்றால், பார்வதி தேவியின் சக்தி சொரூபமாக விளங்குவது கருங்காலி மாலை.
வில்வ மரம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. ஏழு ஜென்ம பாவங்களையும் ஒரு வில்வம் போக்கும் என்பது முன்னோர் வாக்கு. இச்சா, கிரியா, ஞான சக்தி ஆகியவற்றின் வடிவமாய் பூமியில் தோன்றியது வில்வம். இவ்வாறாக சிவபெருமான், பார்வதி தேவியின் அருள் நிறைந்த ருத்திராட்ச, கருங்காலி மணிகளோடு வில்வ மரக்கட்டைகளை மணியாக்கி சேர்த்து கோர்க்கப்படுவதே ருத்ரசக்தி வில்வ மாலை.
இந்த ருத்ரசக்தி வில்வ மாலையை அணிவதால் சிவபெருமானின் திருவருளும், உமையவளின் சக்தியும், குலதெய்வங்களின் அருளும் கிடைப்பதோடு சகல பாவங்களிலுருந்தும் நீங்கி நம்மை நற்கதி அடைய செய்கிறது. இந்த ருத்ரசக்தி வில்வ மாலையை அணிவதால் குழப்பங்கள், பிரச்சினைகள் தீர்ந்து மன அமைதி ஏற்படும்.