சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் இளம்பெண் ஒருவர் நைட்டி மட்டுமே அணிந்தபடி சென்னை விமான நிலையத்தில் இறங்கினார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரைப் போலக் காணப்பட்டார். அவரிடம் இருந்த பாஸ்போட்டை வாங்கிப் பார்த்த காவல்துறையினருக்கு அவர் சிங்கப்பூரில் இருந்து வந்திருப்பது உறுதியானது. இவர் புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள மருதன்கோன் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி என்பவரின் மகள் ரேவதி (வயது 25) என தெரியவந்தது.
இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வீட்டு வேலைக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நைட்டியுடன் விமானத்தில் ஏறி சென்னைக்கு வந்துள்ளார் என தெரியவந்தது. உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ரேவதியை மீட்டுச் சென்றனர்.
WD
வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் இளம்பெண்கள் பலர் மன உளைச்சல் மற்றும் கொடுமைகளில் சிக்கி மனநிலை பாதிக்கப்பட்டு நாடு திரும்புவதாகவும், இது போன்று தான் ரேவதியும் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த செய்தியின் பின்னணியில், வீட்டு வேலைக்குச் சென்ற பெண், மன பாதிப்புக்குள்ளாகி மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார். இவர் மன நிலை பாதிக்கும் அளவிற்கு வீட்டு உரிமையாளரால் சித்ரவதை அனுபவித்திருப்பார். இப்படி தன் நிலையை அறிந்து கொள்ளக்கூட முடியாத நிலையில் ஏராளமான பெண்கள் நாடு திரும்புகிறார்கள் என்று கூறுகிறது ஒரு ஆய்வறிக்கை.