பா.ஜ.க.வை ஜெயலலிதா தவிர்த்தது ஏன்? ரகசியத்தை வெளியிட்ட வெங்கையா நாயுடு

வியாழன், 8 டிசம்பர் 2016 (15:27 IST)
நடைப்பெற்ற தமிழக சட்டசபை தேர்தலின்போது ஜெயலலிதா ஏன் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்ற தகவலை மத்திய அமைசர் வெங்கையா நாயுடு பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த போட்டியில் கூறியுள்ளார்.  


 

 
ஜெயலலிதா மறைந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வமாக செய்தி அறிவிக்கும் முன்பே மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னைக்கு வந்துவிட்டார். அதிலிருந்து ஜெயலலிதா உடலை அடக்கம் செய்யும் வரை இருந்தார்.
 
அதிமுகவின் அடுத்த கட்ட செயல்பாடுகளின் பாஜகவின் தலையீடு உள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக அறிவிக்க பாஜக தான் வலியுறுத்தியது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் வெங்கையா நாயுடு பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
கடந்த சட்டசபை தேர்தலின்போது அதிமுக, பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. ஆனால் ஜெயலலிதா அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். 
 
அதற்கு அவர் கூறிய காரணம், ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிராக குறிப்பிடத்தக்க அளவுக்கு எதிர்ப்பு ஓட்டுக்கள் கிடைக்கும். இருந்தாலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குகளும் அதிமுகவுக்கு கிடைக்காது. இதனால் பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று ஜெயலலிதா கூறினார்.
 
இவ்வாறு வெங்கையா நாயுடு தெரிவித்தார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்